×

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியா வருகிறார் புடின்

மாஸ்கோ: ஜி20 மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் புடின் இந்தியா வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜி 20 தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இதையடுத்து டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10ம் தேதிகளில் ஜி 20 கூட்டமைப்பு தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் புடின் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் அவர் பங்கேற்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்று ரஷ்ய அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் தெரிவித்தார்.

Tags : Putin ,India ,G20 , Putin is coming to India to participate in the G20 conference
× RELATED மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ்..!!