×

அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் பழனிசாமி ஆலோசனை தொடங்கியது

சென்னை: சென்னையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் தொடங்கியது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. நாளை தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசிக்க உள்ள நிலையில் மாவட்ட செயலாளர்களுடன் பழனிசாமி ஆலோசனை செய்து வருகிறார். அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்படவுள்ளதாக தகவல் தெரியப்பட்டுள்ளது.பாஜக- அதிமுக கூட்டணியில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது. கட்சி அலுவலகத்திற்கு வந்திருந்த எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. இடைக்கால பொது செயலாளராக அவர் தேர்தெடுக்கப்பட்டதை அங்கீகரித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதற்கு, பின்னதாக முதல் முறையாக நடைபெறக்கூடிய முக்கிய ஆலோசனை கூட்டம் என்பதால் அவருக்கு கட்சி அலுவலகத்தில் உற்சாகமான வரவேற்பு கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. குறிப்பாக கே.பி முனுசாமி, அவை தலைவர் தமிழ்மகன் உசேன், எஸ்.பி வேலுமணி, ஜெயக்குமார் போன்ற பல்வேறு முக்கிய நிர்வாகிகளும், முக்கிய நபர்களும் அனைத்து மாவட்டங்களிலிருந்து வந்திருக்க கூடிய மாவட்ட செயலாளர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். குறிப்பாக அதிமுகவில் இடைக்கால பொது செயலாளராக அங்கீகரித்த அந்த தீர்ப்புக்கு பின்னர் விரைந்து கட்சியின் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை நடத்தும் முடிவு அவசியம் இருக்கிறது.

எனவே மாவட்ட செயலாளர்கள் அனைவரிடமும் கட்சியினுடைய இந்த முடிவு குறித்து கருத்துக்கள் பெறப்பட்டு விரைவில் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பையும் வெளியிடவும் மாவட்ட கட்சி தலைமை முடிவெடுத்திருக்கிறது. அது தொடர்பான ஆலோசனை தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது. தற்போது அதிமுகவின் கூட்டணி கட்சியாகிய பாஜக  இடையே கருத்து போர் மற்றும் சர்ச்சைகள் தொடர்ந்து வருகிறது. அதிலும் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறிய ஜெயலலிதா போன்று தானும் ஒரு தலைவர் தான் என்று அவர் கூறிய கருத்து அதிமுகவினரை அதிருப்தியடைய செய்திருக்கிறது. மேலும் எடப்பாடி பழனிசாமியினுடைய உருவப்படம் எரித்த நிகழ்வும் அதிமுக தொண்டர்களை அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

தொடர்ச்சியாக முக்கிய நிர்வாகிகள் பலரும் அண்ணாமலையுடைய செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். சற்று நேரத்திற்கு முன்பு அண்ணாமலை தனது வாயை அடக்க வேண்டும் என செல்லூர் ராஜு மிக கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்தார். எனவே இன்றைய தினம் இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகளும், முக்கிய நிர்வாகிகளும் பாஜக மீதான அதிருப்தியான நிலைப்பாட்டை கட்சி தலைமையிடம் சொல்வதற்கும், உடனடியாக இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என்பது போன்ற கருத்துகளை தெரிவிக்க உள்ளதாகவும், இதன் அடிப்படையில் அதிமுக மற்றும் பாஜக இடையே நடைபெற்று வரக்கூடிய இந்த சர்ச்சைகள் குறித்தும் நடைபெற்றுவருகிறது.


Tags : Palanisamy , Palaniswami started consultation with AIADMK district secretaries
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...