×

சீனாவில் குழந்தைகள் பராமரிப்பு மகளிர் காப்பாளர் மையங்களுக்கு வரவேற்பு: பிளாஸ்டிக் பொம்மைகளை வைத்து அதிக கட்டணத்தில் பயிற்சி

ஷாங்காய்: சீனாவில் பிறப்பு விகிதம் வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ள நிலையில், குழந்தைகள் பராமரிப்பு மகளிர் காப்பாளர் மையங்களுக்கு வரவேற்பு பெருகியுள்ளது. சீன அரசு வெளியிட்டுள்ள தரவுகள் அடிப்படையில், நடப்பாண்டியில் 1000 பேருக்கு 6.72 சதவிகிதத்திற்கும் கீழ் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து பதிவாகியுள்ளது.

பொருளாதார நெருக்கடி, குழந்தை பராமரிப்பு, வளர்ப்பு செலவீனம் உள்பட காரணிகளால் சீனர்கள் மத்தியில் குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணம் குறைந்துள்ளது. இந்நிலையில், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் குழந்தைகள் பராமரிப்பு மகளிர் காப்பாளர் பயிற்சி மையங்கள் துவங்கப்பட்டுள்ளன. அங்கு பிளாஸ்டிக் பொம்மைகளை வைத்து குழந்தைகளை பராமரிப்பது குறித்து அதிக கட்டணத்தில் வகுப்புகள் எடுக்கப்படுகிறது.

இதில் குழந்தை பிறந்தது முதலே தாலாட்டுவது, பாலூட்டுவது, குளிப்பாட்டுவது, உள்பட வளர்ப்பு கலைகள் கற்பிக்கப்படுகின்றன. இதில் மகளிர் காப்பாளர்கள் மட்டுமின்றி குழந்தை பெற்ற தாய்மார்களும் பங்கேற்று பயன்பெறுகின்றன.

சீனாவில் நிறைய தம்பதிகள் சரியான குழந்தை பராமரிப்பாளர் கிடைக்காததால் தம்பதிகள் குழந்தைகளின் பிறப்பை தள்ளிப்போடுவதும் தொடர்கிறது. பெற்றோரை முதியோர் இல்லங்களில் விட்டுவிட்டு பணிக்கு செல்லும் பிள்ளைகளால் குழந்தை வளர்ப்பு என்பது எட்டாக்கனியா மாறிவருகிறது. இந்நிலையில், பயிற்சி பெற்ற காப்பாளர் பெண்களுக்கு சீனர்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது.

இதனால் அதிக கட்டணத்தில் பயிற்சியெடுத்து குழந்தைகள் பராமரிப்பு பணிக்கு செல்வதற்கு சீன பெண்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.


Tags : China , Child care women babysitter center, plastic toy, high cost training,
× RELATED கப்பலில் கடத்தப்பட்ட ரூ.1 லட்சம் கோடி...