×

இஸ்ரேல் பிரதமரின் மனைவி சென்ற அழகு நிலையம் முற்றுகை: பொதுமக்கள் போராட்டத்தால் பரபரப்பு

ஜெருசலேம்: இஸ்ரேல் நாட்டில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான கூட்டணி அரசு கடந்த சில நாட்களுக்கு முன் நீதித்துறை மறுசீரமைப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அறிவித்தது. இதற்கு பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது. அரசின் நீதித்துறை சீரமைப்பு சட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றது. டெல் அவிவ்வில் உள்ள அழகு நிலையத்துக்கு பிரதமரின் மனைவியான சாரா நெதன்யாகு சென்றதை அறிந்த போராட்டக்காரர்கள் அங்கு திரண்டு முற்றுகை போராட்டம் நடத்தினர்.  அழகு நிலையம் முன் நின்று அவமானம், அவமானம் என முழக்கமிட்டனர். இதன் காரணமாக அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். மிகுந்த பாதுகாப்புடன் பிரதமரின் மனைவி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த சம்பவத்துக்கு பிரதமர் நெதன்யாகு மற்றும் அவரது கூட்டணி கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 


Tags : Israeli Prime Minister's wife's visit to beauty salon besieged: Public protest stirs up excitement
× RELATED கப்பலில் கடத்தப்பட்ட ரூ.1 லட்சம் கோடி...