×

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் ரத்தத்தில் அதிக நோய் எதிர்ப்பு சக்தி

வாஷிங்டன்: கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள், தடுப்பூசி போட்டவர்கள் அல்லது கொரோனா தொற்றில் இருந்து மீண்டு பின்னர் தடுப்பூசி போட்டுக்கொண்ட தன்னார்வலர்களிடம் இருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கலிபோர்னியாவில் உள்ள ஸ்கிரிப்ஸ் ஆராய்ச்சி மற்றும் வடகலிபோர்னியா பல்கலைக்கழக  ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

இந்த ஆய்வு அறிக்கையானது நோய்எதிர்ப்பு சக்தி என்ற இதழில் வெளியிடப்பட்டது. இந்த ஆய்வில் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் ரத்த மாதிரிகளில் அதிக நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது வருங்காலத்தில் பல்வேறு உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றுக்களில் இருந்து பாதுகாக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.



Tags : People infected with Corona have high immunity in their blood
× RELATED கப்பலில் கடத்தப்பட்ட ரூ.1 லட்சம் கோடி...