துருக்கி: துருக்கியில் 5.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல கட்டடங்கள் இடிந்து விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 51 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகினர். அவர்களில் துருக்கியில் மட்டும் 44,000 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
