×

மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான எல்.ஐ.சியின் பங்கு விலை ரூ.566 ஆக சரிவு

டெல்லி: மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான எல்.ஐ.சியின் பங்கு வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது. பங்கு வெளியீட்டின்போது ரூ.949 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்த எல்.ஐ.சி பங்கு விலை இன்று ரூ.566 ஆக சரிந்துள்ளது. அதானி குழும நிறுவனங்களில் ரூ.30,000 கோடியை முதலீடு செய்துள்ளது எல்.ஐ.சி நிறுவனம். கடந்த டிசம்பரில் எல்.ஐ.சியின் முதலீடு திரண்ட லாபத்துடன் ரூ.80,000 கோடிக்கு மேல் இருந்து வந்தது. அதானி குழும நிறுவனங்களின் முறைகேடுகள் குறித்து ஹிண்டன்பர்க் என்ற ஆய்வு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டை தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் பங்கு விலைகள் 80 சதவீதம் வரை சரிவடைந்துவிட்டன. அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்ததால் லாபத்தில் இருந்த எல்.ஐ.சியின் முதலீடும் ரூ.50,000 கோடி சரிந்தது. ஜனவரி.30ம் தேதி கூட அதானி நிறுவனங்களில் செய்யப்பட்டுள்ள முதலீடுகள் ரூ.20,000 கோடி லாபத்தில் இருந்தன. ஜனவரி.30ம் தேதி கூட அதானி நிறுவன பங்குகளை எல்.ஐ.சி விற்றிருந்தால் ரூ.20,000 கோடி லாபத்துடன் வெளியேறி இருக்கலாம். அதானி குழுமங்களில் உள்ள எல்.ஐ.சி முதலீடு தொடரும் என்ற பிடிவாதமான நிலைப்பாட்டில் அனைத்து லாபமும் கரைந்துவிட்டது.

Tags : Shares of PSUs, LIC, decline
× RELATED மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு...