×

உ.பி முதல்வரின் பாதுகாப்பு பிரிவில் இருந்த காவலர் துப்பாக்கி குண்டு பாய்ந்து பலி

லக்னோ: உத்தர பிரதேசத்தில் துப்பாக்கியை சுத்தம் செய்தபோது தலையில் குண்டு  பாய்ந்து காவலர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநில போலீஸ் ஏட்டு சந்தீப் யாதவ் என்பவர், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் பாதுகாப்பு படைப்பிரிவில் சிறப்பு காவலராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் விடுப்பில் சென்ற சந்தீப், தனது வீட்டில் இருந்தபோது தனது கைத்துப்பாக்கியை துடைத்து சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராமல் அவருடைய கைத்துப்பாக்கி வெடித்தது. இதனால் தலையில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : UP ,Chief Minister , A guard in the UP Chief Minister's security unit was killed by a bullet
× RELATED உத்தராகண்டில் லேசான நிலநடுக்கம்