×

யூடியூப் சிஇஓவாக இந்திய வம்சாவளி நியமனம்

வாஷிங்டன்: இந்திய வம்சாவளியை சேர்ந்த நீல் மோகன் யூடியூப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பதவிக்கு தேர்வாகி உள்ளார். கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட்  நிறுவனத்தின் சிஇஓவாக சத்யா நாதெள்ளா ஆகியோர் அமெரிக்காவில் பணியாற்றி வரும் நிலையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நீல் மோகன் என்பவர், யூடியூப்  நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பதவிக்கு தேர்வாகி உள்ளார். கடந்த 2008ல் கூகுளில் சேர்ந்த நீல் மோகன், 2012ல் யூடியூப் பிரிவிற்கு மாற்றப்பட்டார். இதையடுத்து 2015ல் யூடியூப்பின் தலைமை தயாரிப்பு அதிகாரியானார். தற்போது தலைமை செயல் அதிகாரியாக தேர்வாகி உள்ளார்.

Tags : YouTube , Indian origin appointed as YouTube CEO
× RELATED இந்தியாவின் எதிர்ப்புக்கு பதில்...