×

துருக்கியில் மீட்புப்பணியின் போது உயிரிழந்த நாய்: மெக்சிகோவை சேர்ந்த நாய் புரோடியோவுக்கு ராணுவ வீரர்கள் மரியாதை

மெக்சிகோ: துருக்கியில் மீட்புப்பணியின் போது உயிரிழந்த மெக்சிகோவை சேர்ந்த நாய்க்கு ராணுவ வீரர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த குழுவினர் மீட்பு பணியில் ஈடுப்பட்டு இருக்கின்றனர். அந்த வகையில் மெக்சிகோவில் இருந்து ராணுவ வீரர்களுடன் மீட்பு படையை சேர்ந்த 16 நாய்கள் கொண்டு செல்லப்பட்டன. அதில் புரோடியோ என்ற நாய் கடந்த வாரம் அடியமின் பகுதியில் மீட்பு பணியில் ஈடுப்பட்டு இருந்த போது உயிரிழந்தது. இந்த நாய் 2 பேரை உயிருடன் மீட்பதற்கு உதவி உள்ளது.

உயிரிழந்த புரோடியோ விமானம் மூலம் மெக்சிகோ ராணுவ விமான தளத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு குழுமி இருந்த அந்த நாட்டு ராணுவ வீரர்கள் மீட்பு நாய்க்கு இறுதி மரியாதையை செலுத்தினர். புரோடியோவின் தந்தை நாய் உட்பட மீட்பு படையை சேர்ந்த 5 நாய்கள் இறுதி மரியாதையை செலுத்தும் நிகழ்வில் பங்கெடுத்தனர். புரோடியோவின் சேவைக்கு மரியாதை செலுத்தும் வகையில் இறுதி அஞ்சலி நடைபெற்றது.     



Tags : Turkey , Turkey, rescue, deceased, dog, Mexico, respect
× RELATED நடுவானத்தில் குலுங்கிய கத்தார்...