×

நடுவானத்தில் குலுங்கிய கத்தார் ஏர்வேஸ் பயணிகள் விமானம்: 20 விநாடிகள் குலுங்கிய விமானத்தால் 12 பயணிகளுக்கு காயம்

துருக்கி: காற்று கொந்தளிப்பு எனப்படும் ஹேர் டெர்புலன்சில் சிக்கி கத்தார் ஏர்வேஸ் விமானம் நடுவானில் குலுங்கிய மற்றொரு சம்பவம் துருக்கி வான் பகுதியில் நிகழ்ந்துள்ளது. கத்தார் ஏர்வேஸ் நிர்வாகத்திற்கு சொந்தமான கியூ.ஆர்.ஜீரோ.ஒன் 7 என்ற பயணிகள் விமானம் கத்தார் தலைநகர் தோகாவிலிருந்து அயர்லாந்து தலைநகரான டுப்லினுக்கு புறப்பட்டது. இந்த விமானத்தில் 100க்கும் மேற்பட்ட பயணிகள், விமான பெண் ஊழியர்கள் இருந்தனர்.

காற்றின் திசை வேகத்தில் ஏற்பட்ட திடீர் மாறுபாட்டால் சுமார் 20 வினாடிகள் விமானம் வேகமாக குலுங்கி. சில 100 அடிகள் கீழே இறங்கியது. இதில் 6 பயணிகள் மற்றும் 6 பெண் ஊழியர்கள் காயமடைந்தனர். மதியம் 1 மணி அளவில் அட்டவணைப்படி அயர்லாந்து டுபிளந் விமான நிலையத்தில் கத்தார் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. அங்கு 8 பயணிகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த ஒரு வாரத்திற்குள் நிகழும் 2வது விமானம் குலுங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

The post நடுவானத்தில் குலுங்கிய கத்தார் ஏர்வேஸ் பயணிகள் விமானம்: 20 விநாடிகள் குலுங்கிய விமானத்தால் 12 பயணிகளுக்கு காயம் appeared first on Dinakaran.

Tags : Qatar Airways ,Turkey ,Doha ,Qatar ,
× RELATED இஸ்ரேல் – ஹமாஸ் போர்: போர்நிறுத்த...