×

புதுடெல்லி-திருவனந்தபுரம் இடையே ஏர் இந்தியா புதிய விமான சேவை

புதுடெல்லி: புதுடெல்லி-திருவனந்தபுரம் இடையே ஏர் இந்தியா புதிய விமான சேவையை தொடங்கியுள்ளது. இது பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுடெல்லி-திருவனந்தபுரம் விமான நிலையங்களுக்கு இடையே இன்டிகோ, விஸ்டாரா ஆகிய நிறுவனங்கள் தினமும் 3 முறை விமான சேவைகளை அளித்து வருகின்றன. இந்த வரிசையில் தற்போது, ஏர் இந்தியா புதிய தினசரி சேவையை தொடங்கியுள்ளது.

ஏஐ 829 என்ற இந்த விமானம் திருவனந்தபுரத்தில் காலை 6.40 மணிக்கு புறப்பட்டு டெல்லி விமான நிலையத்துக்கு காலை 9.25 மணிக்கு வந்தடையும். ஏஐ 830 என்ற விமான சேவை டெல்லியில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு திருவனந்தபுரத்துக்கு அதிகாலை 12.20 மணிக்கு சென்றடையும். இந்த விமானங்களில் 180 பயணிகள் செல்லலாம். ஏர் இந்தியாவின் 4வது சேவை இதுவாகும் என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

Tags : Air India ,New Delhi ,Thiruvananthapuram , Air India New Delhi-Thiruvananthapuram service
× RELATED உத்தராகண்டில் லேசான நிலநடுக்கம்