வாஷிங்டன்: டிவிட்டரின் புதிய சிஇஓவாக எலான் மஸ்க் வெளியிட்டுள்ள படம் சர்ச்சையாகி உள்ளது. சமூக ஊடகங்களில் ஒன்றான டிவிட்டர் நிறுவனத்தை உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க் கடந்த ஆண்டு அக்டோபர் இறுதியில் வாங்கினார். அதை தொடர்ந்து டிவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த இந்தியர் பராக் அகர்வால் மற்றும் தலைமை நிதி அதிகாரி நெட் செகல் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். டிவிட்டருக்கான சி.இ.ஓ. பதவி காலியான நிலையில், அதற்கான புதிய நபரை தேடும் பணியை மஸ்க் ஈடுபட்டார். தற்போது எலான் மஸ்க்கின் செல்ல பிராணியான அவரது வளர்ப்பு நாய் பிளாக்கியை டுவிட்டரின் புதிய சி.இ.ஓ. என மஸ்க் அறிமுகப்படுத்தி இருக்கிறார். இதுபற்றி புகைப்படம் ஒன்றை டிவிட்டரில் எலான் மஸ்க் பகிர்ந்து உள்ளார். அதில் டிவிட்டர் சி.இ.ஓ. நாற்காலியில் பிளாக்கி அமர்ந்து உள்ளது. கருப்பு நிற டி-சர்ட் அணிந்தபடியும், அதில் சி.இ.ஓ. என்று எழுதியபடியும் காணப்படுகிறது. டிவிட்டர் லோகோவுடன் கூடிய சிறிய லேப்டாப் ஒன்றும் பிளாக்கியின் முன்னால் உள்ளது. இது சர்ச்சையாகி உள்ளது.