டெல்லி: உச்சநீதிமன்றத்துக்கு மேலும் 2 நீதிபதிகளை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேஷ் பிண்டால் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அரவிந்த் குமார் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நீதிபதிகள் நியமனம் தொடர்பாக ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
