×

குடியரசுத் தலைவராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக தமிழ்நாடு வருகின்றார்: குடியரசு தலைவர் திரௌபதி முர்மு

டெல்லி: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 2 நாள் சுற்றுப்பயணமாக பிப்ரவரி 18, 19ம் ஆகிய தேதிகளில் தமிழ்நாடு வருகிறார். மதுரை மற்றும் கோவையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்கிறார். குடியரசுத் தலைவராக பதிவியேற்ற பின்னர் முதல் முறையாக தமிழ்நாடு வருகை தருகின்றார்  திரௌபதி முர்மு. டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை விமானிலயத்திற்கு 18ம் தேதி காலை 11.50 மணி அளவில் வருகின்றார்.

மதுரை கோயம்பத்தூர் ஆகிய இரு மாவட்டங்களில் நடைபெறும் நிகழிச்சியில் பங்கேற்பதற்காக இந்திய ஜனாதிபதி தமிழ்நாடு வருகின்றார். இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு வருகிற 18ம் தேதி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை விமானநிலையம் வருகின்றார். இதை தொடர்ந்து மதியம் 12 மணி அளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சுவாமி தரிசனமானது மேற்கொள்ளவுள்ளார்.

இதனை தொடர்ந்து 2 மணி அளவில் மீண்டும் மதுரை விமானநிலையம் வந்தடைந்து அங்கிருந்து தனி விமானம் மூலம் கோயம்பத்தூர் செல்கின்றார். கோயம்பத்தூர் விமானநிலையத்தில் 3 மணி அளவில் அங்கு சென்றடைந்து அங்கு ஓய்வு எடுக்கவுள்ளர். பிறகு மாலை 5.40 மணி அளவில் நடைபெறும் ஈஷா மையத்தின் மஹாசிவராத்திரி விழாவில் பங்கேற்கவுள்ளார். அங்கிருந்து தொடர்ந்து 19ம் தேதி காலை 9 மணி அளவில் கோயம்பத்தூரில் இருந்து டெல்லி புறப்பட்டு செல்கின்றார். இவராக இந்திய ஜனாதிபதி 2 நாள் பயணமானது தமிழ்நாட்டில் நடைபெறவுள்ளது.    


Tags : Tamil Nadu ,President ,Draupadi Murmu , Visiting Tamil Nadu for the first time after taking office as President: President Draupadi Murmu
× RELATED வீர் சக்ரா விருது பெற்ற மாஜி கடற்படை...