×

நிலக்கரிக்கு அதிக கட்டணம் அதானி ஒப்பந்தம் மறுபரிசீலனை: வங்கதேசம் அறிவிப்பு

டாக்கா;  வங்கதேசத்தில் உள்ள கோடாவில் 1600 மெகாவாட் மின்சார ஆலைக்கு நிலக்காி இறக்குமதி செய்ய அதானி பவர் நிறுவனத்திடம் கடந்த 2017ம் ஆண்டு வங்க தேச அரசு ஒப்பந்தம் செய்தது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள அதானி ஆலையில் இருந்து வங்கதேசத்திற்கு நிலக்கரி சப்ளை செய்யப்படுகிறது.

ஒரு மெட்ரிக் டன் 400 டாலர் விலை நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் 250 டாலர் தான் இருக்க வேண்டும் என்பதால் அதானி நிறுவனத்துடன் செய்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யக் கோரி நாங்கள் அதானி நிறுவனத்துடன் தொடர்பு கொண்டுள்ளோம் என்று வங்கதேச பவர் டெவலப்மென்ட் போர்டு  அதிகாரி தெரிவித்தார்.


Tags : Adani ,Bangladesh , Coal price hike Adani deal review: Bangladesh notice
× RELATED 2025ம் ஆண்டில் 1 லட்சம் விசாக்களை ரத்துசெய்தது அமெரிக்க அரசு..!!