×

தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லி: கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் திரிகோணமலைக்கு 180 கி.மீ. தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது எனவும் வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை இலங்கை கடற்கரை பகுதிகளை கடக்கக் கூடும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் மேற்கு - தென்மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


Tags : Tamil Nadu ,Meteorological Inspection Centre , Heavy rain is likely to occur in 11 districts of Tamil Nadu today, according to the Meteorological Department
× RELATED டெல்லியில் உள்ள எய்ம்ஸ்...