×

கொடைக்கானலில் பூத்து குலுங்கும் ஆர்னமென்டல் செர்ரி மலர்கள்

கொடைக்கானல்: கொடைக்கானலில் வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் ஆர்னமென்டல் செர்ரி மலர்கள் பூத்து குலுங்குவதால்  சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் ஆண்டுக்கு ஒரு முறை மரத்தில் பூக்கும் ஆர்னமென்டல் செர்ரி மலர்கள் பூக்க துவங்கியுள்ளன. ஜனவரி மாதம் பூக்க துவங்கும் இந்த மலர்கள் பிப்ரவரி, மார்ச் மாதங்கள் வரை நீடிக்கும்.

இளம்சிவப்பு நிறத்தில் பூக்கும் இந்த மலர்கள் மரத்தில் அழகாக காட்சியளிக்கும். பிரையண்ட் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த செர்ரி மலர்களை கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்வர். வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் இந்த ஆர்னமென்டல் செர்ரி மலர்கள் கடந்த வாரம் பூக்க துவங்கியது. மரம் முழுவதும் இந்த மலர்கள் பூத்து குலுங்குவதால் கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Kodicanal , Ornamental cherry blossoms blooming in Kodaikanal
× RELATED தேனி, கொடைக்கானல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக கனமழை..!!