×

இந்தோனேஷியாவில் 6.1 ரிக்டர் நிலநடுக்கம்

ஜகார்தா: இந்தோனேஷியாவின் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள், கட்டிடங்களில் லேசான அதிர்வுகள் உணரப்பட்டது. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.1 புள்ளிகளாக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் கோரான்டாலோ, வடக்கு சுலவேசி, வடக்கு மலுகு மற்றும் மத்திய சுலவேசி மாகாணங்களில் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. கோரன்டாலோவின் தெற்கு-தென்கிழக்கில் கடலுக்கு அடியில் 147கி.மீ. ஆழத்தை மையமாக கொண்டு உருவாகி இருந்தது.

Tags : Indonesia , 6.1 magnitude earthquake hits Indonesia
× RELATED 2025ம் ஆண்டில் 1 லட்சம் விசாக்களை ரத்துசெய்தது அமெரிக்க அரசு..!!