×

மக்களின் கனவு தவிடுபொடியாகிறது!.. ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் தற்போது பஞ்சாப்பில் உள்ளது. இன்று லூதியானாவிலிருந்து கபுர்தலாவிற்கு ராகுல்காந்தி செல்கிறார். இந்நிலையில் ராகுல்காந்தி வெளியிட்ட பதிவில், ‘தற்போதைய ஒன்றிய பாஜக அரசால், நிரந்தர பொருளாதார நெருக்கடியை நாடு சந்திக்கும். இளைஞர்களிடையே வேலையின்மை, கடுமையான விலைவாசி உயர்வு, விவசாய துறையில் கடுமையான நெருக்கடி, நாட்டின் செல்வத்தை பெருநிறுவனங்கள் கைப்பற்றுதல் ஆகியன அதிகரித்துள்ளன.

மக்கள் தங்களது வேலைகளை இழந்து வருவதால் அவர்களின் வருவாய் வெகுவாக குறைந்து வருகிறது. அவர்களின் எதிர்காலம் குறித்த கவலைகளும் அதிகரித்துள்ளன. அவர்களின் கனவுகள் தவிடுபொடியாகி வருகிறது. நாடு முழுவதும் மக்கள் ஆழ்ந்த விரக்தியில் உள்ளனர்’ என்று தெரிவித்துள்ளார்.

Tags : Raqul Gandhi , People's dream, Rahul Gandhi alleges
× RELATED வீர் சக்ரா விருது பெற்ற மாஜி கடற்படை...