×

மகாத்மா காந்தி தேசத்தின் தந்தை; புதிய இந்தியாவின் தந்தை மோடி: பட்னாவிஸ் மனைவி புகழாரம்

நாக்பூர்: மகாத்மா காந்தி தேசத்தின் தந்தை, பிரதமர் மோடி புதிய இந்தியாவின் தந்தை என்று மகாராஷ்டிரா துணைமுதல்வர் பட்னாவிஸ் மனைவி அம்ருதா தெரிவித்தார்.‘‘புதிய இந்தியா” என்ற தலைப்பில் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடந்த நிகழ்ச்சியில்  துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மனைவி அம்ருதா பேசினார்.

அப்போது பிரதமர் மோடியை அவர் தேசத்தின் தந்தை என்று அழைத்தார்.  அவர் பேசுகையில்,’ மகாத்மா காந்தி தேசத்தின் தந்தை. பிரதமர் மோடி புதிய இந்தியாவின் தந்தை. இரண்டு தேச தந்தைகள் உள்ளனர். இந்த காலத்தில் இருந்து ஒருவர், அந்த காலத்தில் இருந்து ஒருவர். எனவே இந்தியாவுக்கு 2 தேச தந்தைகள் இருக்கிறார்கள்’ என தனது கருத்தை கூறியுள்ளார்.

Tags : Mahatma Gandhi ,Modi ,India , Mahatma Gandhi is the father of the nation; Modi, Father of New India: Fadnavis' Wife Praises
× RELATED வீர் சக்ரா விருது பெற்ற மாஜி கடற்படை...