×

 கோசாலைகள் கண்காணிக்க ஆலோசகர் நியமனம்

சென்னை: இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை: அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 121 கோயில்களில் உள்ள கோசாலைகளில் கோயில்களுக்கு காணிக்கையாக  வழங்கப்படும் கால்நடைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. 2022- 23ம் ஆண்டின் சட்டமன்ற பேரவையின் வரவு செலவு கூட்டத்தொடரில் மானிய கோரிக்கையை விவாதத்தின் போது 121 கோயில்களில் உள்ள கோசாலைகள் ரூ.20 கோடி மதிப்பீட்டில்  மேம்படுத்தப்படும் என அமைச்சர் சேகர் பாபு அறிவித்திருந்தார். எனவே கோயில்களில் உள்ள கோசாலைகளை விரிவு படுத்துதல், காற்றோட்ட வசதிகள் ஏற்படுத்துதல், கால்நடைகளுக்கு குடிக்க தூய்மையான தண்ணீர் வசதியினை ஏற்படுத்துதல், கால்நடைகளுக்கு தேவையான இடத்தில் மின் விசிறிகள் அமைத்தல், பூச்சிகள், ஈ மற்றும் கொசு போன்றவை வராமல் தடுக்க இயந்திரங்களை பொறுத்துதல், மாதம் இருமுறை கால்நடை மருத்துவர்களை வைத்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளுதல் உள்ளிட்டவைகளை முறையாக பராமரித்து கண்காணிப்பது அவசியமாகும். எனவே இத்துறையில் உள்ள கோசாலைகளை பராமரித்தடவும், தேவையான ஆலோசனைகளை வழங்கிடவும் ஓய்வு பெற்ற அசோகனை ‘கோசாலை ஆலோசகராக செய்து உத்தரவிடுகிறேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : Kosalas , Appointment of consultant to monitor Kosalas
× RELATED மத்திய பிரதேசம் மது கடைகளில் கோசாலைகளை தொடங்க போகிறேன்: உமா பாரதி ஆவேசம்