×

அந்தமான் பகுதியில் டிச.13ம் தேதி உருவாகிறது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: வானிலை மையம் தகவல்

டெல்லி: வங்கக்கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் டிச.13ம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டிச.13 மற்றும் 14ம் தேதிகளில் மேலடுக்கு சுழற்சி தீவிரமடைந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பு உள்ளது. மாண்டஸ் புயல் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து 9 கி.மீ. வேகத்தில் வேலூருக்கு 30 கி.மீ. தொலைவில் நகர்கிறது. கிருஷ்ணகிரிக்கு கிழக்கு வடகிழக்கில் 120 கி.மீ. தூரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிக்கிறது. அடுத்த 12 மணி நேரத்தில் இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் என்றும் கூறியுள்ளது.


Tags : Andaman ,Meteorological Department , Atmospheric upper circulation forms in Andaman region on Dec 13: Meteorological Department informs
× RELATED உத்தராகண்டில் லேசான நிலநடுக்கம்