×

5 மாநிலங்களில் இடைத்தேர்தல் அகிலேஷ் மனைவி வெற்றி: பா.ஜ, காங்கிரஸ் தலா 2 இடங்களில் அபாரம்

புதுடெல்லி: மெயின்புரி மக்களவை இடைத்தேர்தலில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ்யாதவ் மனைவி வெற்றி பெற்றார். பா.ஜ, காங்கிரஸ் தலா 2 இடங்களில் வென்றன. உபி முன்னாள் முதல்வர் முலாயம்சிங் யாதவ் மரணத்தால் மெயின்புரி மக்களவை தொகுதி காலியானது. மேலும் அங்கு ராம்புர்சதார், பீகாரில் குர்ஹானி உள்பட 5 மாநிலங்களில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தது. அங்கு நேற்று ஓட்டு எண்ணிக்கை நடந்தது.  மெயின்புரி மக்களவை இடைத்தேர்தலில்  சமாஜ்வாடி கட்சி வெற்றி பெற்றது.

அங்கு முலாயம்சிங் மருமகளும், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் மனைவியுமான டிம்பிள்யாதவ் போட்டியிட்டார். அவர் பா.ஜ வேட்பாளர் ரகுராஜ் சிங்கை விட 2,88,461 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். அதே சமயம் ராம்பூர் சதார் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் சமாஜ்வாடி கட்சியிடம் இருந்து அந்த தொகுதியை பா.ஜ கைப்பற்றியது. கட்டவுளி தொகுதியை பா.ஜவிடம் இருந்து சமாஜ்வாடி கூட்டணி கட்சியான ராஷ்ட்ரீய லோக் தளம் கைப்பற்றியது. அந்த கட்சியின் வேட்பாளர் மதன் 22 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் பா.ஜ வேட்பாளர் ராஜ்குமாரியை வீழ்த்தினார். பீகார் மாநிலத்தில்   குர்ஹானி தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் பா.ஜ வேட்பாளர் கேதார் பிரசாத் குப்தா 3,645 ஓட்டுகள் வித்தியாசத்தில் ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர் மனோஜ்சிங் குஷ்வாஹாவை வீழ்த்தினார்.

ராஜஸ்தான் மாநிலம் சதார்சஹார் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் அனில்சர்மா 26,850 ஓட்டு வித்தியாசத்தில் பா.ஜ வேட்பாளர் அசோக்குமாரை வீழ்த்தி வெற்றி பெற்றார். பானுபிராத்பூர் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சாவித்திரி மாண்டவி 21,171 ஓட்டு வித்தியாசத்தில் பா.ஜ வேட்பாளர் பரமானந்தை வீழ்த்தினார். ஒடிசாவில் பதாம்பூர் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் பிஜூ ஜனதாதளம் வேட்பாளர் பர்ஷா சிங் 42,679 ஓட்டுகள் வித்தியாசத்தில் பா.ஜ வேட்பாளர் பிரதீப் புரோகித்தை வீழ்த்தினார்.


Tags : Akhilesh ,BJP ,Congress , Akhilesh's wife wins by-elections in 5 states: BJP, Congress win 2 seats each
× RELATED இந்திய ஓபன் பேட்மின்டன் இன்று தொடக்கம்..!!