×

இங்கிலாந்து மன்னர் மீது முட்டை வீச்சு

லண்டன்: இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மரணத்துக்கு பிறகு மன்னராக பதவியேற்றுள்ள மூன்றாம் சார்லஸ், நாடு முழுவதும் பயணம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் வடக்கு லண்டனில் இருந்து 46 கி.மீ. தொலைவில் உள்ள லுட்டன் நகரத்துக்கு சென்றார். அங்கு நகர்மன்ற கட்டிடத்துக்கு வெளியே பொதுமக்களை சந்தித்தார். அப்போது, மன்னர் சார்லஸ் மீது ஒரு முட்டை வீசப்பட்டது. உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு, மன்னர் சார்லசை வேறு ஒரு இடத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர் தொடர்ந்து பொதுமக்களை சந்தித்து கை குலுக்கினார். மன்னர் மீது முட்டை வீசப்பட்டது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Tags : King of England , Throwing eggs at the King of England
× RELATED கப்பலில் கடத்தப்பட்ட ரூ.1 லட்சம் கோடி...