×

திருப்பதியில் டிசம்பர் மாத ஆர்ஜித சேவை டிக்கெட் நாளை வெளியீடு

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டிசம்பர் மாதம் நடைபெறும் ஆர்ஜித சேவைகளுக்கான மெய்நிகர் டிக்கெட்டுகள் நாளை(புதன்கிழமை) காலை வெளியிடப்படுகிறது. இதில் கோயிலில் நடைபெறும் கல்யாண உற்சவம், ஆர்ஜித  பிரமோற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ரதீப அலங்கார சேவையில் நேரடியாக பங்கேற்க முடியாது. இந்த டிக்கெட்களை வைத்து சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த டிக்கெட்கள் நாளை காலை 10 மணிக்கு  ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.


Tags : Tirupati ,Arjita , Tirupati, Arjitha service, ticket, release tomorrow
× RELATED உத்தராகண்டில் லேசான நிலநடுக்கம்