×

என்னை `புனித அன்னை’ என்று அழைக்க வேண்டும்: பாஜ மூத்த தலைவர் உமா பாரதி விருப்பம்

போபால்: பாஜ மூத்த தலைவருமான உமா பாரதி, ‘இனிமேல் என்னை `புனித அன்னை’ என்று அழைக்க வேண்டும்,’ என்று டிவிட்டரில் கூறியுள்ளார். மத்திய பிரதேசத்தில் முதல்வராக இருந்தவர் உமா பாரதி. பாஜ மூத்த தலைவர்களில் ஒருவர். இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன், அதாவது 1992ம் ஆண்டு நவம்பர் 17ம் தேதி அமர்கந்த்நாக்கில் சன்னியாசம் பெற்றார். அப்போது, உமா பாரதி என்று இருந்த அவருடைய பெயர் உமா பாரதி என மாற்றப்பட்டது.

இந்நிலையில், நேற்று அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், `சன்னியாசம் பெற்று 30 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், தற்போதைய குரு ஸ்ரீவித்யாசாகர் ஜி மகராஜின் ஆலோசனைப்படி, அனைவரும் என்னை `புனித அன்னை` என்று அழைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். `பாரதி என்பது இந்தியாவுக்கு உரியது. ஆனால், புனித அன்னை என்று அழைக்கப்பட்டால் நான் அனைவருக்குமானவள் என்ற அர்த்தமாகும்.

எனவே, அவர் கூறியபடி எல்லாரும் என்னை புனித அன்னை என்று அழையுங்கள்,’’ என்று கூறியுள்ளார்.சன்னியாசம் பெற்ற போது எம்பி.யாக இருந்ததால் தனது பெயரை அதிகாரபூர்வமாக மாற்ற முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags : BJP ,Uma Bharti , To be called ``Holy Mother'', senior BJP leader, Uma Bharati wishes
× RELATED உத்தராகண்டில் லேசான நிலநடுக்கம்