×

தமிழ் படங்களை தயாரிக்கிறார் தோனி

மும்பை: தமிழ், தெலுங்கு, மலையாள படங்களை தயாரிக்க கிரிக்கெட் வீரர் தோனி முடிவு செய்திருக்கிறார். கிரிக்கெட் அகாடமியை அடுத்து பள்ளிக்கூடம் நடத்துவது, திரைப்பட தயாரிப்பு ஆகியவற்றிலும் தோனி தடம் பதிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தோனியின் திரைப்பட தயாரிப்பு நிறுவனம், ‘தோனி என்டெர்டெயின்மென்ட்’ என்ற பெயரில் இயங்கி வருகிறது.

ஏற்கனவே, ‘தி ரோர் ஆப் தி லயன்’ என்கிற ஆவணப் படத்தைத் தயாரித்திருக்கும் இந்நிறுவனம், இனி நேரடி திரைப்படங்களை தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் தமிழ், தெலுங்கு, மலையாள மொழிப்படங்களை மட்டுமே தோனி தயாரிக்க இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Tags : Dhoni , Dhoni is producing Tamil films
× RELATED திருவனந்தபுரத்தில் சத்யாகிரக...