×

பருவமழையை சமாளிக்க 5000 மண் மூட்டைகள் தயார்: நெடுஞ்சாலைத்துறை தகவல்

வேதாரண்யம்: வேதாரண்யம் தாலுகாவில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை செய்யும் வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் இடர்பாடுகளை சமாளிக்க ஐந்தாயிரம் மண் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை தகவல் தெரிவித்தனர். வேதாரண்யம் தாலுகாவில் வடகிழக்கு பருவமழையால் சாலைகளில் ஏற்படும் உடைப்புகளை சரி செய்ய நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் தற்போது மணல் முட்டைகள் தயார் செய்யும் பணியில் சாலை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இங்கு தற்போது 5 ஆயிரம் மண் மூட்டைகள் தயார் செய்யப்பட்டு சாலை ஓரங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் ஆறுகளின் கரைகளில் உடைப்பு ஏற்பட்டால், அதனை சரி செய்யும் வகையில் சாலை ஓரங்களில் மண் மூட்டைகள் அடுக்கி வைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் அனைத்து இடர்பாடுகளையும் சமாளிக்க நெடுஞ்சாலை துறையினர் தயார் நிலையில் உள்ளனர் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Highways Department , 5000 soil bags ready to deal with monsoon: Highways Department Information
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...