×

நேமம் ஊராட்சியில் 500 பனை விதைகள் நடும் விழா

திருவள்ளூர்: பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம், நேமம் ஊராட்சியில் 500 பனை விதைகள் நடும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் என்.எஸ்.ஜெ.பிரேம்நாத் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் விஜயா ரமேஷ், ஒன்றிய கவுன்சிலர் வழக்கறிஞர் என்.பி.மாரிமுத்து, வார்டு உறுப்பினர்கள் என்.உமாசங்கரி நாகராஜ், கே.தமிழழகன், வி.சிவகாமி வடிவேல், எம்.உதயகுமார், எஸ்.முருகன், டி.விஜயா தாமோதரன், எம்.நிரோஷா மகேஷ், சி.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் எஸ்.ரீமாவதி அனைவரையும் வரவேற்றார்.

இந்த விழாவில் ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர் எப்.மல்லிகா, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் (தணிக்கை) சுதா ஆகியோர் கலந்து கொண்டு 500 பனை விதைகள் நடும் திட்டத்தினை தொடங்கி வைத்தனர். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜி.சிவக்குமார், தூய்மை பாரத திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் கோ.சிவானந்தம் மற்றும் அரசு அலுவலர்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Tags : Nemam Panchayat , Planting ceremony of 500 palm seeds in Nemam Panchayat
× RELATED நேமம் ஊராட்சியில் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு