×

ஆசிய பயணத்தின் முதல் கட்டமாக சிங்கப்பூர் வந்தார் நான்சி பெலோசி

கோலாலம்பூர்: அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தனது ஆசிய சுற்றுப்பயணத்தின் முதல் கட்டமாக சிங்கப்பூர் வந்தடைந்தார். அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தனது ஆசிய பயணத்தின் போது தைவானுக்கு செல்வதாக அறிவித்தார். தைவானுக்கு உரிமை கொண்டாடும் சீனா இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனிடையே, சபாநாயகர் பெலோசி தனது ஆசிய பயணத்தை நேற்று முன்தினம் உறுதி செய்தார். அதன்படி, அவர் தனது குழுவினருடன் நேற்று அதிகாலை சிங்கப்பூர் வந்தார்.

‘‘இந்த 2 நாள் பயணத்தில், பெலோசி, சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப், பிரதமர் லீ சியன் லுங், பல்வேறு துறைகளின் அமைச்சர்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்,’’ என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். அமெரிக்க அரசின் முக்கிய பொறுப்பில் உள்ள பெலோசி, உலக அரங்கில் அமெரிக்காவின் தூதுவராக தன்னை நிலைநிறுத்தி கொள்ள தைவான் விஜயம் ஒரு படிகல்லாக அமையும் என்பதால் அவரது தைவான் பயணம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரம், ‘பெலோசி தைவான் சென்றால், சீன ராணுவம் வேடிக்கை பார்த்து கொண்டு சும்மா இருக்காது,’ என்று சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Nancy Pelosi ,Singapore , Nancy Pelosi arrived in Singapore on the first leg of her Asian tour
× RELATED சிங்கப்பூர் துறைமுகத்தில் கப்பலில்...