×

24 ஆண்டுகளுக்கு பிறகு வடகொரியாவில் கால் பதித்த ரஷ்ய அதிபர் புதின் : உக்ரைன் மீதான போரை தீவிரப்படுத்த ஆயுதங்கள் வாங்க திட்டம்!!

பியோங்யாங் : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் 24 ஆண்டுகளுக்கு பிறகு வடகொரியா நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். தலைநகர் பியோங்யாங் விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு (இந்திய நேரப்படி) வந்திறங்கிய புதினை வடகொரிய அதிபா் கிங் கிம் ஜோங்-உன் வரவேற்றதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்து வெளியிட்டது. கடந்த ஆண்டு வடகொரியா கிம் ஜாங் உன் ரஷ்ய பயணத்திற்கு பிறகு இரு நாடுகளுக்கு இடையேயான உறவு வலுப்பெற்றுள்ளதாகவும் இந்த சூழலில் தான் ரஷ்ய அதிபர் புதினின் பயணம் அமைந்துள்ளதாகவும் கூறியுள்ளது.

இன்று கிம் ஜாங் உன்னை அவர் சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் அப்போது பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து பேசப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பு இருநாடுகளுக்கு இடையிலான கலாசாரம், விவசாயம், பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறைகளில் உறவுகளை வலுப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் உக்ரைன் மீதான போரை ரஷ்யா தொடர்ந்து வரும் நிலையில், வடகொரியாவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த 24 ஆண்டுகளில் புதின், வடகொரியாவில் கால் பதிப்பது இதுவே முதல் முறையாகும். கடந்த 2000ம் ஆண்டு வடகொரியத் தலைவர் `கிம் ஜாங் இல்’ ஆட்சியில் இருந்த போது அவர் அங்கு சென்றிருந்தார்.

The post 24 ஆண்டுகளுக்கு பிறகு வடகொரியாவில் கால் பதித்த ரஷ்ய அதிபர் புதின் : உக்ரைன் மீதான போரை தீவிரப்படுத்த ஆயுதங்கள் வாங்க திட்டம்!! appeared first on Dinakaran.

Tags : President Putin ,North Korea ,Ukraine ,Pyongyang ,President ,Vladimir Putin ,King Kim Jong-un ,Putin ,Pyongyang airport ,Dinakaran ,
× RELATED எந்த நாடாவது தாக்கினால் இணைந்து...