×

பாகிஸ்தானை விட இந்தியாவில் அதிகளவில் அணு ஆயுதங்கள்.. வெளிவந்த புதிய ஆய்வறிக்கை!!

ஸ்டாக்ஹொம் : பாகிஸ்தானை விட இந்தியாவில் அதிகளவில் அணு ஆயுதங்கள் இருப்பதாக ஸ்டாக்ஹொம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் 172 அணு ஆயுதங்களும் பாகிஸ்தானிடம் 170 அணு ஆயுதங்களும் இருப்பதாக கூறப்படுகிறது. அதே சமயம் சீனாவிடம் 500 அணு ஆயுதங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. 9 அணு ஆயுத நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, இஸ்ரேல், இந்தியா வட கொரியா, பாகிஸ்தான், இஸ்ரேல் ஆகியவை தங்களது அணு ஆயுத குவியல்களை தொடர்ந்து நவீனப்படுத்தி வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அணு ஆயுதம் தொடர்பாக போட்டி நடப்பதாகவும் இந்தியாவின் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை 172 ஆகவும் பாகிஸ்தானிடம் 170 இருக்கலாம் என்று அந்த அறிக்கையில் உள்ள தகவல்கள் கூறுகிறது. உலகில் இருக்கும் ஒட்டுமொத்த அணு ஆயுதங்களில் 90% அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிடம் மட்டும் இருப்பதாகவும் ஒரே ஆண்டில் சீனா தனது அணு ஆயுதங்களை 410ல் இருந்து 500 ஆக உயர்த்தி உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பாகிஸ்தானை விட இந்தியாவில் அதிகளவில் அணு ஆயுதங்கள்.. வெளிவந்த புதிய ஆய்வறிக்கை!! appeared first on Dinakaran.

Tags : India ,Pakistan ,Stockholm ,Stockholm International Peace Research Institute ,
× RELATED ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில்...