×

5 வருடங்களுக்குப் பிறகு தமிழில் நடிக்கும் ஸ்ரீதிவ்யா

சென்னை: கடந்த 2000ல் மோகன் ராஜா தெலுங்கில் இயக்கியிருந்த ‘ஹனுமான் ஜங்ஷன்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், ஸ்ரீதிவ்யா. பிறகு அவர் ஹீரோயினாக நடித்தார். இதையடுத்து தமிழுக்கு வந்த அவர், சிவகார்த்திகேயன் ஜோடி யாக ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் நடித்தார். தொடர்ந்து ‘ஜீவா’, ‘வெள்ளக்கார துரை’, ‘காக்கி சட்டை’, ‘ஈட்டி’, ‘பென்சில்’, ‘மருது’, ‘மாவீரன் கிட்டு’ உள்பட சில படங்களில் மட்டுமே நடித்தார்.

 கடைசியாக 2017ல் ரிலிசான ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ என்ற படத்தில் நடித்திருந்தார். பிறகு அவருக்கு புதுப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால், ஐதராபாத்துக்கு திரும்பி சென்ற அவர், தற்போது 5 வருடங்களுக்குப்  பிறகு மீண்டும் தமிழில் நடிக்க வந்து இருக்கும் படம், ‘ரெய்டு’. இதில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்க,சாம் சி.எஸ் இசை அமைக்கிறார். கார்த்தி இயக்குகிறார்.

Tags : Sridivya , Sridivya is acting in Tamil after 5 years
× RELATED ஸ்ரீதிவ்யா ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்!