×

சாலையில் நடந்து சென்ற வாலிபரை வெட்டி செல்போன் பறிப்பு

 

சென்னை, மே 29: கிழக்கு தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் ஹேமநாதன் (30). இவர், சொந்த வேலை காரணமாக நேற்று முன்தினம் மின்சார ரயில் மூலம் நுங்கம்பாக்கம் வந்தார். பிறகு ரயில் நியைத்தில் இருந்து சூளைமேடு பகுதி நோக்கி நடந்து ெசன்று கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த 2 பேர் ஹேமநாதனை வழிமறித்து செல்போன் பறிக்க முயன்றனர். சுதாரித்துக்கொண்ட அவர், திருடன் திருடன் என சத்தம் போட்டு பொதுமக்களை உதவிக்கு அழைத்தார்.

இதனால் ஆத்திரமடைந்த 2 வழிப்பறி கொள்ளையர்கள் கையில் வைத்திருந்த கத்தியால் ஹேமநாதனை தலை மற்றும் காலில் வெட்டிவிட்டு அவரிடம் இருந்து செல்போனை பறித்து கொண்டு தப்பினர். இதில் படுகாயமடைந்த ஹேமநாதனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஹேமநாதன் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் சம்பவ நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று தப்பிய 2 வழிப்பறி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

The post சாலையில் நடந்து சென்ற வாலிபரை வெட்டி செல்போன் பறிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Hemanathan ,East Tambaram ,Nungambakkam ,Niiyam ,Chulaimedu ,Dinakaran ,
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...