×

ஆதிதிராவிடர் உயர்நிலை பள்ளியில் எலக்ட்ரிக் பொருட்கள் திருட்டு: 3 பேர் கைது

 

பெரம்பூர், மே 29: புளியந்தோப்பு நெடுஞ்சாலை பகுதியில் அரசு ஆதிதிராவிடர் உயர் நிலைப் பள்ளியில் நேற்று முன்தினம் இரவு சிலர் உள்ளே புகுந்து பள்ளியில் இருந்த பேட்டரிகள் உள்ளிட்ட 30 ஆயிரம் மதிப்புள்ள எலக்ட்ரிக் பொருட்களை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் அண்ணாதுரை பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய புளியந்தோப்பு மோதிலால் தெரு பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் (எ) ஏழுமலை (19), நரேந்திரன் (எ) நரி (23), சஞ்சய் (எ) கார்கோ (18) ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது.

அவர்களை நேற்று கைது செய்தனர். இவர்கள் திருடிய பொருட்களை ஓட்டேரி பகுதியில் உள்ள பழைய இரும்பு கடையில் போட்டு அந்த பணத்தில் மது குடித்ததாக தெரிவித்தனர். இதையடுத்து 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post ஆதிதிராவிடர் உயர்நிலை பள்ளியில் எலக்ட்ரிக் பொருட்கள் திருட்டு: 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Adi Dravidar High School ,Perambur ,Government ,Pulianthoppu Highway ,Adi Dravidar ,High School ,Dinakaran ,
× RELATED இன்ஸ்டாகிராமில் துப்பாக்கி, கத்தியை காட்டி ரீல்ஸ் வெளியிட்டவர் கைது