×

குத்தாலம் அருகே கோமல் கிராமத்தில் விஏஓ அலுவலக கட்டிடம் சீரமைப்பு-அதிகாரிகள் நடவடிக்கை

குத்தாலம் : குத்தாலம் அருகே கோமல் கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள விஏஓ அலுவலகம் தினகரன் செய்தி எதிரெலியாக சீரமைக்கப்பட்டது.மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா கோமல் கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள விஏஓ அலுவலக கட்டிடம் இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டி கொடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் கட்டப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதனால் இந்த கட்டிடத்தின் மேற்கூரை பகுதியிலுள்ள காரைகள் பெயர்ந்து விழுந்துள்ளன.

மேலும் மேற்கூரை எந்த நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. மழை பெய்கின்றபோது மழைநீர் கசிந்து கட்டிடத்திற்குள் வருவதால் கட்டிடத்திற்குள் வைக்கப்பட்டுள்ள அரசு கணக்கு பதிவேடுகள் மழைநீரில் நனைந்து வீணாகிறது. எந்த நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ள இந்த கட்டிடத்தில்தான் விஏஓ அலுவலகம் இயங்கி வந்தது.

தினந்தோரும் இக்கிராம மக்கள் பல சான்றுகள் பெறுவதற்காக இந்த கட்டிடத்திற்கு சென்று வந்த வண்ணம் இருந்தனர். எனவே கிராம மக்களின் பாதுகாப்புக் கருதி இடிந்து விழும் நிலையில் உள்ள கோமல் விஏஓ அலுவலக கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட கிராம மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இது தொடர்பானt செய்தி தினகரன் நாளிதழில் பிரசுரிக்கப்பட்டது. செய்தி எதிரொலியாக அதிகாரிகள் உடனே கோமல் கிராம நிர்வாக அலுவலகம் சென்று கட்டிடத்தை பார்வையிட்டனர். பின்னர் கட்டிடம் சீரக்கும் பணி நடந்தது. தினகரன் செய்தி எதிரொலியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், ெசய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Tags : VOO ,Komal village ,Kuthalam , Kuthalam: VO office collapsing in Komal village near Kuthalam echoes Dinakaran news
× RELATED கோமல் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாடி...