கள்ளக்குறிச்சி: குரும்பலூர் கிராமத்தில் வீட்டினில் இருந்த சிலிண்டர் வெடித்து சிதறி விபத்து ஏற்பட்டடிருக்கிறது. தகவல் தெரிவித்தும் காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வர வில்லை என கிராம மக்கள் குற்றம்சாட்டினார். கள்ளக்குறிச்சி மாவட்டடம் கல்வராயன் மலை பகுதியில் உள்ள மலை கிராமமான குரும்பலூர் கிராமத்தில் , சிறிய கூரை வீட்டில் ராஜா மற்றும் அவரது மனைவி ஜெயராணி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ரோஹித் ஷர்மா என்ற 10 மாத ஆண் குழந்தை உள்ளது . இந்த நிலையில் நேற்று இரவு ராஜாவின் மனைவி ஜெயராணி வீடடில் பால் காய்ச்சு கொண்டியிருந்த போது அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு டீ தூள் வாங்குவதற்காக தனது 10 மாத குழந்தையுடன் சென்றுள்ளார் .
அப்போது அடுப்பில் வைத்துள்ள பால் அதிக கொதிநிலை ஏற்பட்டு பல முறை பொங்கி வழிந்துள்ளது. இதனால் திடீரென சிலிண்டரில் இருந்து அடுப்புக்கு செல்லும் குழாயில் தீ பற்றி ஏறிய தொடங்கியது. இந்த நிலையில் வீட்டில் உள்ள சிலிண்டர் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் அக்கம் பக்கத்தினர் அலறிடித்து கொண்டு அருகே உள்ள அரசு பள்ளியில் தஞ்சம் அடைந்தனர். இது குறித்து பல முறை அந்த பகுதியில் கரிகளூர் காவல் நிலையத்துக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தும் காவல் துறையினரும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்து இது வரைக்கும் சம்பவ இடத்திற்கும் வர வில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.
இந்த தீ விபத்தின் போது வீட்டில் யாரும் இல்லதா நிலை இருந்ததால் உயிர் சேதம் ஏற்பட வில்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. அதாவது தீ விபத்து குறித்து தீயணைப்பு துறையினர்க்கு தகவல் கொடுத்து வராத நிலையில் அப்பகுதியில் உள்ள பொது மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள தண்ணீர் குளங்களில் உள்ள தண்ணீரை கொண்டு அடித்து அந்த தீயை முழுமையாக கட்டுப்படுத்தினர். இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து காவல்துறை சம்பவ இடத்த்திற்கு வர வில்லை என்பது குறிப்பிடதக்கது.
