×

வாக்குச்சாவடிகளில் புதிதாக வாக்காளர் பெயர் சேர்க்க படிவங்களை வழங்கிட வாக்குச் சாவடி நிலை அலுவலர் நியமனம்

 

சென்னை: சென்னை மாவட்டத்திற்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ள 979 இடங்களிலும் 23.12.2025 முதல் 18.1.2026 வரை அனைத்து நாட்களிலும் (பண்டிகை நாட்கள் நீங்கலாக) காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை புதிதாக வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் மேற்கொள்ளுதல் ஆகியவற்றிற்கான படிவங்களை வழங்கிடவும், பூர்த்தி செய்து படிவங்களைப் பெறுவதற்கும் ஒவ்வொரு இடத்திலும். ஒரு வாக்குச் சாவடி நிலை அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடி மையங்கள் அமையப்பெற்ற 979 இடங்களிலும் 23.12.2025 முதல் 18.01.2026 வரை அனைத்து நாட்களிலும் (பண்டிகை நாட்கள் நீங்கலாக) காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை புதிதாக வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் மேற்கொள்ளுதல் ஆகியவற்றிற்கான படிவங்களை வழங்கிடவும், பூர்த்தி செய்து படிவங்களைப் பெறுவதற்கும் ஒவ்வொரு இடத்திலும். ஒரு வாக்குச் சாவடி நிலை அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் ஒவ்வொரு வார்டு அலுவலகங்களிலும், வாக்குச்சாவடி மையங்களிலும் வைக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் இணைய தளத்திலும் (VOTERS’ SERVICE PORTAL) பார்வையிட்டு தெரிந்து கொள்ளலாம். இதனைப் பார்வையிட்டு வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் மேற்கொள்ளுதல் ஆகியவற்றிற்கானப் படிவங்களை இங்கு நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம், படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்கிடலாம். இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டு மைய எண் 1913ல் தொலைபேசியின் வாயிலாக கேட்டும் தெரிந்து கொள்ளலாம்.

 

Tags : Chennai ,Chennai district ,
× RELATED ஈரோட்டில் காட்டு யானை தாக்கியதால்...