×

கேரளாவில் இன்று பட்ஜெட் தாக்கல்

திருவனந்தபுரம்: கேரளாவில் நடந்த தேர்தலில் இடதுசாரி கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று முதன்முறையாக முதல்வர் பினராய் விஜயன் தலைமையிலான அரசு ெதாடர்ந்து 2வது முறையாக கடந்த 20ம் தேதி பொறுப்பேற்றது. கடந்த 24ம் தேதி முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடந்து வருகிறது. அதில், புதிய அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.கடந்த ஜனவரியில் அப்போதைய நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில், புதுப்பிக்கப்பட்ட பட்ஜெட்டை நிதி அமைச்சர் பாலகோபால் இன்று தாக்கல் செய்கிறார். கொரோனா பரவல் காரணமாக நிதி நிலைமை மோசமாக இருப்பதால் இந்த பட்ஜெட்டில் கூடுதல் வரிகள் விதிக்கப்படும் என கருதப்படுகிறது. குறிப்பாக மது, மோட்டார் வாகனம், கட்டிடம், நிலம், பெட்ரோலிய பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என கூறப்படுகிறது….

The post கேரளாவில் இன்று பட்ஜெட் தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Kerala ,Thiruvananthapuram ,Left Wing Alliance ,CM ,Pinarai Vijayan ,Dinakaran ,
× RELATED மனைவி பிரிந்ததால் வேதனை; தற்கொலையை...