×

வெளிநாடுவாழ் தமிழக தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை: முதல்வருக்கு எஸ்.டி.பி.ஐ.கட்சி கோரிக்கை

சென்னை: எஸ்.டி.பி.ஐ.கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:  கொரோனா பேரிடரால் உள்நாடு, வெளிநாடுகளில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பயணத்தடையால், தாங்கள் வேலை செய்த நாடுகளுக்கு திரும்ப செல்ல இயலாத சூழ்நிலையில் இருந்து வருகின்றனர். சில குறிப்பிட்ட நாடுகள் மட்டும் முக்கிய பணி சார்ந்த தொழிலாளர்களுக்கு மட்டும் நாடு திரும்ப சிறப்பு அனுமதி வழங்கின.விமான சேவை துவங்கும் போது கொரோன தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டும் அனுமதிக்க திட்டமிட்டுள்ளன. இந்த திட்டத்தை விரைவில் அமல்படுத்த வாய்ப்புக்கள் உள்ளதால் உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற தடுப்பூசியை குறுகிய காலத்தில், விடுமுறையில் தமிழகம் வந்து வெளிநாடுகளுக்கு செல்வதற்காக காத்திருக்கும் தமிழர்களுக்கு செலுத்திட தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விடுமுறையில் நாடு திரும்பியுள்ள வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் காலதாமதம் ஏற்படும்போது, அவர்களின் விசா அனுமதி காலாவதியாகி அவர்கள் அந்நாடுகளுக்கு செல்ல முடியாத சூழல் ஏற்படும். அவர்கள் தங்கள் வேலையையே இழக்கவும் வாய்ப்புள்ளது. ஆகவே தயவுகூர்ந்து வெளிநாடுகளுக்கு செல்ல காத்திருக்கும் தமிழக தொழிலாளர்களுக்கு சிறப்பு அனுமதி அளித்து தடுப்பூசி செலுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். …

The post வெளிநாடுவாழ் தமிழக தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை: முதல்வருக்கு எஸ்.டி.பி.ஐ.கட்சி கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,STPI ,Chief Minister ,Chennai ,State President ,Nellie Mubarak ,M. K. Stalin ,Minister ,Health and Welfare ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…