×

வெளிநாட்டில் மருத்துவம் படித்த மாணவர்களுக்கு என்ஓசி கட்டாயம்

சென்னை: தமிழக  சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பை நிறைவு செய்தவர்கள், தங்களது மாநிலத்தில் ஓராண்டு பயிற்சியை நிறைவு செய்ய வேண்டும். அப்போதுதான் இங்கு டாக்டராகப் பணியாற்ற முடியும்.  தற்போது 80 மாணவர்களுக்கு கடலூர், காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் பணியாற்ற ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டது. தற்போது அவர்கள் அனைவரும் மருத்துவக் கல்வி இயக்ககத்தின் கீழ் தான் பணியாற்ற வேண்டும் என்பதால் அவர்களது பணியிடங்கள் சென்னை அரசு மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசாணை வெளியிட்டுள்ள மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, சம்பந்தப்பட்ட மாணவர்கள் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் தடையில்லாச் சான்றை பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது….

The post வெளிநாட்டில் மருத்துவம் படித்த மாணவர்களுக்கு என்ஓசி கட்டாயம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu Health Department ,
× RELATED சென்னை சேப்பாக்கத்தில்...