×

ஓசூர் அருகே ஒற்றை யானை நடமாட்டம் - வனத்துறை எச்சரிக்கை

ஓசூர்: ஓசூர் அருகே ஆக்ரோஷத்துடன் ஒற்றை யானை சுற்றித்திரிவதால் கிராம மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சானமாவு வனப்பகுதி ராமச்சந்திரம் கிராமத்தில் ஒற்றை யானை முகாமிட்டுள்ளதாக வனத்துறை  விடுத்துள்ளது. இரவு நேரங்களில் விளை நிலங்களுக்கு காவல் இருப்பதற்காக யாரும் செல்ல வேண்டாம் என்று வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. வனப்பகுதியை ஒட்டியுள்ள இடங்களுக்கு மேய்ச்சலுக்காக கால்நடைகளை ஓட்டிச்செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர். ஏற்கனவே 2 விவசாயிகளை ஒற்றை காட்டுயானை தாக்கிக்கொன்றுள்ளதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Tags : Oshur , Elephant
× RELATED 24 பேரின் பெயர்கள் நீதிபதி பதவிகளுக்கு...