×

கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் புள்ளி விவரங்களை அளிப்பதற்கு போதிய கால அவகாசம் தேவை: கோயில் நிர்வாக அதிகாரிகள் சங்கம், அறநிலைய ஆட்சித்துறை அலுவலர் சங்கம் வேண்டுகோள்

சென்னை: தமிழ்நாடு திருக்கோயில் நிர்வாக அதிகாரிகள் சங்க தலைவர் அருட்செல்வன் அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரனுக்கு எழுதியுள்ள கடிதம்:முழு ஊரடங்கு அமலில் உள்ள சூழ்நிலையில் ஒட்டு மொத்த புள்ளி விவரங்களை அனுப்புமாறு அந்தந்த உதவி ஆணையர் மற்றும் இணை ஆணையர் அலுவலர்கள் உத்தரவிட்டு வருகின்றனர். எனவே, ஊரடங்கு நிலைமை சீரடைந்த பின் பணிகளை விரைந்து முடித்து ஆணையருக்கும், அரசிற்கும் பெருமை சேர்ப்போம்.தமிழ்நாடு இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை அலுவலர் சங்க தலைவர் வாசுகி கடிதம்:கொரோனா காரணமாக, பதவி உயர்வின் மூலமும், பணிமாறுதல் மூலமும் புதிய பணியிடத்தில் பணியாற்றும் இணை ஆணையர், உதவி ஆணையர் அலுவலக பணியாளர்கள், ஆய்வர்கள், கண்காணிப்பாளர்கள் உட்பட அனைத்து அமைச்சு பணியாளர்களுக்கு தமிழக அரசின் தடையுத்தரவு காரணமாக சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலையில் போதிய புள்ளி விவரங்களுக்கு அரசுக்கு சமர்ப்பிக்க இயலாமல் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். எனவே, இக்கட்டான சூழ்நிலையில் ஆணையர்  வாட்ஸ்அப்பில் கேட்கும் புள்ளி விவரங்கள் சமர்ப்பித்துக் கொண்டிருக்கும் நிலையில் அலுவலகங்களுக்கு சென்று புள்ளி விவரங்கள் எடுத்து சமர்ப்பிக்க இலயாத நிலை உள்ளதால் அமைச்சு பணியாளர்களின் நிலையை கவனத்தில் கொண்டு பு்ள்ளி விவரங்கள் சமர்ப்பிப்பதற்கு போதிய கால அவகாசம் வழங்கவேண்டும்….

The post கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் புள்ளி விவரங்களை அளிப்பதற்கு போதிய கால அவகாசம் தேவை: கோயில் நிர்வாக அதிகாரிகள் சங்கம், அறநிலைய ஆட்சித்துறை அலுவலர் சங்கம் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Corona ,Temple Administrative Officers Association ,Federal Administrative Officers Association ,Chennai ,Tamil Nadu Thirukoil Administrative Officers Association ,Arutselvan ,Department of Government ,Kumarubarubarubaran ,Dinakaran ,
× RELATED கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு...