×

ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்ற விவகாரத்தில் இதுவரை 27 பேர் கைது!: போலீசார் நடவடிக்கை..!!

சென்னை: ரெம்டெசிவிர் மருந்தினை கள்ளச்சந்தையில் விற்ற விவகாரத்தில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாட்டினை பயன்படுத்தி சமூக விரோத கும்பல்கள் இந்த மருந்தை கள்ளச்சந்தையில் பல ஆயிரம் ரூபாய்க்கு விற்று வருகின்றனர். 5,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை விற்பனை செய்துள்ளனர். இது தொடர்பாக தமிழக போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


இந்த மருந்தின் தேவை தமிழகம் முழுவதும் அதிகரிக்க ஆரம்பித்தவுடன் மிகப்பெரிய கும்பல், வங்கதேசத்தில் இருந்து அங்கீகரிக்கப்படாத ரெம்டெசிவிர் மருந்தை கடத்தி வந்து தமிழகத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. சென்னை மயிலாப்பூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, மதுரவாயல் உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். 


அவர்களிடம் நடத்திய விசாரணையில் சென்னை கொண்டித்தோப்பை சேர்ந்த மொத்த மருந்து வியாபாரி நிதிஷ் என்பவர் வங்கதேசத்தில் இருந்து மொத்தமாக 500 ரெம்டெசிவிர் மருந்துகளை கொண்டு வந்து அவற்றை தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்துள்ளார். இதேபோன்று மருத்துவமனைகளில் இருந்து மருந்துகளை பதுக்கி விற்பனை செய்த பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை ரெம்டெசிவிர் மருந்தை பதுக்கி விற்பனை செய்த 27 பேர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.



Tags : Remtacivir , Remtacivir drug, counterfeit, 27 arrested
× RELATED புதுச்சேரி மருத்துவமனைகளில்...