×

முழு ஊரடங்கு காரணமாக இன்று மற்றும் மே 2ம் தேதி மெமு சிறப்பு விரைவு ரயில்கள் முழுவதுமாக ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு காரணமாக, இன்று மற்றும் மே 2 ஆகிய தேதி ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் மெமு (முக்கிய தட மின்சார ரயில்) சிறப்பு விரைவு ரயில்கள் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:ரயில் எண் (06025) சென்னை எழும்பூரிலிருந்து காலை 6.35 மணிக்கு புதுச்சேரி வரை இயக்கப்படும் மெமு சிறப்பு விரைவு ரயில் ஏப்ரல் 25 மற்றும் மே 2 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.அதைபோன்று ரயில் எண் (06026) புதுச்சேரியிலிருந்து பிற்பகல் 3.35 மணிக்கு சென்னை எழும்பூர் வரை இயக்கப்படும் மெமு சிறப்பு விரைவு ரயில் நாளை மற்றும் மே 2 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : MEMU ,Southern Railway , Special express trains canceled today and May 2 due to complete curfew: Southern Railway Notice
× RELATED ரயிலில் இருந்து கர்ப்பிணி...