×

தங்கவயல் நகரம் அடையாளத்தை இழக்கும் ஆய்வாளர்கள் அச்சம்

திறந்தவெளி சுரங்கம் அமைத்தால் தங்கவயல் நகரம் தற்போதுள்ள தனது அடையாளத்தை முழுமையாக இழந்துவிடும். எதிர்காலத்தில் தங்கவயல் என்று நகரம் ஒன்று இருந்ததாக வரலாற்றில் மட்டுமே இடம் பெற்றிருக்குமே தவிர, அதன் சுவடுகள் முழுமையாக தொலைந்து விடும். மேலும் ராட்சத இயந்திரம் மூலம் மண் மற்றும் பாறை வெட்டி எடுக்கும்போது, அதிலிருந்து வெளியேறும் கெட்ட தூசி மாசாக மாறி காற்றில் பறக்கும். அது மக்கள் குடியிருப்பு பகுதியில் பரவி பல கொடிய நோய்கள் உருவாக்கும். கடந்த 120 ஆண்டுகளில் 7.50 லட்சம் கிலோ தங்கம் மட்டுமே வெட்டி எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த கோலார் கோல்ட் என்ற தனியார் நிறுனம் சுரங்கத்தை ஏற்று நடத்த வாய்ப்பு கேட்டுள்ளது. அந்நிறுவனத்தின் ஆய்வுபடி 2.32 லட்சம் கிலோ தங்கம் வெட்டி எடுக்கும் திட்டம் தயாரித்துள்ளது. அதுவும் ஆழ சுரங்கத்தில் இல்லாமல், திறந்தவெளி சுரங்கம் மூலம் 500 அடியில் பள்ளம் தோண்டி தங்கம் எடுப்பதே அந்நிறுவனத்தின் முடிவாகவுள்ளது. கோலார் கோல்ட் நிறுவனம் மட்டுமல்ல. வேறு எந்த வெளிநாட்டு நிறுவனம் சுரங்கம் தோண்ட டெண்டர் எடுத்தாலும், அதே வழிமுறையை தான் பின்பற்றும் என்பது ஆய்வாளர்களின் கருத்தாகவும்.

இது தவிர கடந்த நூறாண்டுகளுக்கு முன் தோண்டி தங்கம் வெட்டி எடுத்தப்பின் மூடிய பல சுரங்கம் தற்போது அடிக்கடி பாறை வெடித்து கிணறுகள் போல் பல அடி ஆழத்தில் பள்ளம் விழுகிறது. அதன்மூலம் வெளியேறும் ஆக்சிஜன் காற்றில் பரவி சுவாசிக்கும்போது மயக்கம் உள்பட பல பாதிப்புகள் அடிக்கடி சுரங்க பகுதியில் நடந்த வண்ணம் உள்ளது. இது மக்கள் மத்தியில் அச்சம் ஏற்படுத்திவரும் நிலையில், மீண்டும் திறந்தவெளி சுரங்கம் தோண்டினால், அதில் ஏற்படும் அதிர்வுகள் மூலம் மூடிய நிலையில் பாழடைந்துள்ள பல சுரங்கங்கள் மீண்டும் திறந்து பள்ளம் விழும். இது பெரியளவில் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது ஆய்வாளர்களின் கருத்தாகவுள்ளது.


Tags : Analysts ,city ,Goldfields , Goldfields, city, explorers, fear
× RELATED திமுக சார்பில் தண்ணீர் பந்தல்