×

2036ம் ஆண்டு காலகட்டத்தில் தமிழகத்தில் 58% நகரவாசிகளாக இருப்பார்கள்: மத்திய அரசு அறிக்கையில் தகவல்

சென்னை: 2031 - 35ம் ஆண்டு காலகட்டத்தில் தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் 58 சதவீதம் பேர் நகர்புறத்தில் வசிப்பார்கள் என்று ெதரியவந்துள்ளது. இந்தியாவில் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. 2011ம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை 121 கோடியாக இருந்தது. இந்த எண்ணிக்கை  2036ம் ஆண்டில்  152 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒவ்வொரு ஆண்டுக்கும் இந்தியாவின் மக்கள் தொகை 1 சதவீதம் அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. குறிப்பாக கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு இடம் பெயர்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் 2011ம் ஆண்டு மொத்தம் 31.8 சதவீதம் மக்கள் நகர்புறத்தில் வசித்தனர். இந்த எண்ணிக்கை 2036ம் ஆண்டில் 38.2 சதவீதமாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நகர்புறத்திற்கு அதிகம் குடி பெரும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருக்கும் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது. இதன்படி தமிழகத்தில் 2011ம் ஆண்டு தமிழகத்தின் மொத்த தொகை 7.21 கோடியாக இருந்தது. 2021ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 7.64 கோடியாகவும், 2036ம் ஆண்டு 7.80 கோடியாகவும் இருக்கும்.

இதில் ஆண்களின் எண்ணிக்கை 3.87 கோடியாகவும், பெண்களின் எண்ணிக்கை 3.93 கோடியாகவும் இருக்கும். எனினும் 58.2 சதவீதம் பேர் நகர்புறத்தில் வசிப்பவர்களாக இருப்பார்கள். இந்த எண்ணிக்கை 2011ம் ஆண்டு 49.3 சதவீதமாக இருந்தது. நகர்மயமாதலில் 2036ம் ஆண்டு டெல்லி, கேரளாவிற்கு அடுத்த படியாக தமிழகம் 3வது இடத்தில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஒரு சதுர கி.மீட்டர் பகுதியில் 2021ம் ஆண்டு 587 பேரும், 2026ம் ஆண்டில் 596 பேரும், 2036ம்் ஆண்டில் 600 பேரும் வசிப்பார்கள் என்று கணக்கீடப்பட்டுள்ளது.

குழந்தைகள் இறப்பு விகிதம்

2036ம் ஆண்டு தமிழகத்தில் குழந்தைகள் இறப்பு விகிதம் 16 சதவீதம் குறையும். இதனால் குறைந்த குழந்தைகள் இறப்பு விகிதம் கொண்ட மாநிலங்கள் வரிசையில் தமிழகம் 2வது இடத்தில் இருக்கும். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மரணம் 19 சதவிதகமாக குறையும்.

பாலினம் எப்படி இருக்கும்?
ஆண், பெண் பிறப்பு பாலின விகிதம் 1015 ஆக அதிகரிக்கும். இதன்படி பாலின விகிதம் 2021ம் ஆண்டு 1002 ஆகவும், 2026ம் ஆண்டு 1006 ஆகவும், 2031ம் ஆண்டு 1011 ஆகவும், 2036ம் ஆண்டு 1015 ஆகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகர்புறத்தில்
4.67 கோடி பேர்
2036ம் ஆம் தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை 7.80 கோடியாக இருந்தால், இதில் 4.67 கோடி நகரத்தில் வசிப்பார்கள். 2021ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 4 கோடியாகவும், 2026ம் ஆண்டு 4.29 கோடியாகவும், 2031ம் ஆண்டு 4.49 கோடியாகவும் இருக்கும்.


Tags : Tamil Nadu ,Central Government ,dwellers , By 2036, 58% of Tamil Nadu will be urban dwellers: Central Government report
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...