×

சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்குமாறு முதல்வரிடம் ஆர்.கே.செல்வமணி நேரில் கோரிக்கை

சென்னை: சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கக் கோரி ஃபெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் சென்று கோரிக்கை அளித்துள்ளார். சின்னத்திரை படப்பிடிப்பு நடந்தால் சுமார் 2000 தொழிலாளர்கள் பயன்பெறுவர் என ஆர்.கே.செல்வமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். மேலும் உரிய முடிவை விரைவில் தெரிவிப்பதாக முதல்வர் உறுதியளித்ததாக கூறினார். சின்னத்திரை, வெள்ளித்திரை போன்ற படப்படிப்புகளுக்கும் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சின்னத்திரை படப்பிடிப்பு நிறுத்துவதால் தொழிலாளர்கள் பலரின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும் என கூறினார். மேலும் குறைந்த அளவில் ஆட்களை வைத்து படப்பிடிப்பு அனுமதி வழங்க கோரிக்கை விடுத்துள்ளோம் என கூறினார். தற்போது கொரோனா மின்னல் வேகத்தில் பரவி வருவதால் முழு ஊரடங்கு அமல்ப்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி செல்லும் வாகனங்கள், ஆம்பூலன்ஸ் போன்ற வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. …

Tags : CM ,Chief Minister ,Shootings of Sinnatriya ,Vellvamam ,Chennai ,FEFC ,R.R. K.K. Selvamani ,Tamil Nadu ,G.K. ,Stalin ,
× RELATED மழையில் நெல் மூட்டைகள் சேதம்; உணவு...