×

குடிசை பகுதியில் வசிக்கும் 26 லட்சம் பேருக்கு இலவச உணவு

சென்னை: சென்னையில் புயல் பாதித்த குடிசை பகுதியில் வசிக்கும் 26 லட்சம் பேருக்கு  இலவச உணவு வழங்கப்பட்டது. சென்னையில், தொடர் மழையால், 50க்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. தாழ்வான மற்றும் குடிசை, புறநகர் பகுதிகளில் உள்ளவர்கள் தொடர் மழை காரணமாக, தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இதனால், உணவு, குடிநீர் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு சிரமங்களை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து சென்னையில், வரும் 13ம் தேதி வரை குடிசை வாழ் மக்களுக்கு இலவச உணவு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி அடையாறு அம்பேத்கர் நகரில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதில் ஆணையர் பிரகாஷ், துணை ஆணையர் மேகநாத ரெட்டி, வட்டார துணை ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஸ், தலைமை பொறியாளர் நந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சென்னை மாநகராட்சி வருவாய் அலுவலர் சுகுமார் சிட்டி கண்காணிப்பில் சென்னை மாநகராட்சியில் வருவாய் துறை ஊழியர்கள் இலவச உணவு வழங்கும் பணியை செய்து வருகின்றனர். இதன்படி நேற்று காலை பொங்கல், மதியம் கலவை சாதங்கள், இரவு சப்பாத்தி உணவு வழங்கப்பட்டது. நேற்று மட்டும் 791 பகுதிகளில் 26 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : slums , Free food for 26 lakh people living in slums
× RELATED சித்திரை திருவிழா நெருங்குகிறது...